Gowtham Pathippagam - கௌதம் பதிப்பகம் - தொட்டிக் கட்டு வீடு
பணம் செலுத்தும் போது கவனிக்க...
எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். உதாரணமாக 2 நூல் (ரூ.50+ரூ.60) வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 140 செலுத்தவும்.(ரூ.500க்கு மேல் வாங்கினால் தமிழகத்திற்குள் அஞ்சல் கட்டணம் இலவசம்.)
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
மேலும் விவரங்களுக்கு
செய்திகள்
தமிழக அரசுப் பேருந்து கட்டணம் உயர்வு
வைரமுத்து மீதான வழக்குகளுக்கு தடை
அம்மா வாகன திட்டம்: ஆதார கட்டாயம்
காரைக்கால் பாஸ்போர்ட் மையம் திறப்பு
ஓகி புயல் : மத்திய குழு அறிக்கை தாக்கல்
சினிமா செய்திகள்
நடிகை தேவயானியின் தந்தை மரணம்
கோவா:மலையாள நடிகர் சித்து மர்ம மரணம்
22-ம் தேதி நடிகை பாவனா திருமணம்
யு சான்று பெற்ற டிக் டிக் டிக்: ஜன.26 வெளியீடு
மாரி 2 படத்தில் இசைஞானியின் பாடல்
கௌதம் பதிப்பகம்
தொட்டிக் கட்டு வீடு

ஆசிரியர்: இரா.வடிவேலன்

பதிப்பு: நவம்பர் 2014

விலை: ரூ.95/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 192

பிரிவு: புதினம்

ISBN: 978-93-81134-66-5

நூல் குறிப்பு: கொங்கு வட்டார வழக்கில் மிகச் சிறப்பாகப் படைக்கப்பட்ட ‘தொட்டிக் கட்டு வீடு’ நாவல் 1993இல் வெளியாகிப் பல கல்லூரிகளில் பாடத் திட்டத்தில் இடம் பெற்றது. கொங்கு நாட்டில் மறைந்து வரும் பழைய பண்பாட்டின் பல கூறுகளை இந்நாவலில் மிக விரிவாகப் படைத்துள்ளார் ஆசிரியர் இரா.வடிவேலன் அவர்கள். இன்றைய தலைமுறை மறந்துபோன பல சடங்குகளும், நிகழ்வுகளும், நாவலில் இடம் பெற்று, கொங்கு நாட்டு மானிடவியல் களஞ்சியமாகத் திகழ்வதைப் படிப்பவர்கள் உணர முடிகின்றது.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்

தினமணி - 29-06-2015 - நூல் அரங்கம்

கொங்கு நாடு என்றழைக்கப்படும் தமிழகத்தின் மேற்குப் பகுதியான கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கிராம மக்களின் கலாச்சாரம், பண்பாடு, உறவுமுறை, சமுதாய அமைப்பு போன்றவற்றை கதையின் களமாக வைத்து இந்த நாவலைப் படைத்துள்ளார் நூலாசிரியர். ஈரோடு அருகே உள்ள கவுண்டம்பாளையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் கவுண்டர் இன மக்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கிறது இந்த நாவல். கொங்கு வட்டார வழக்கில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் வசிக்கும் வீடுகளின் வடிவமைப்பை வைத்தே ‘தொட்டிக் கட்டு வீடு’ என இந்த நாவலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

கதையில் வரும் மயிலாத்தாள் கொங்கு நாட்டு கிராமங்களின் வேளாண் பெருங்குடிகளான கவுண்டர்கள் வீட்டுப் பெண்களின் குணநலன்களின் மொத்த உருவமாகத் திகழ்கிறாள். இதே போல இந்நாவலில் உலா வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மிக உயிர்ப்போடு சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். நிலம் நீரோடை, ஊர்ப் பஞ்சாயத்து கூடும் இடம், கோயில், விளைபொருள்களைச் சேமித்து வைக்கும் இடம் என அனைத்தையும் நம் கண் முன் கொண்டு வந்திருப்பது சிறப்பு.

மாறிக் கொண்டிருக்கும் கொங்கு நாட்டு மக்களின் கலாசாரத்துக்கு இந்த நாவல் புத்துயிர் ஊட்டுகிறது என்று சொன்னால், அது மிகையல்ல.

கொங்கு நாட்டு கிராம மக்களின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த நாவலை அவசியம் படிக்க வேண்டும்.


கௌதம் பதிப்பகம் - நூல்கள் மற்றும் மின்னூல் குறுந்தகடுகள்