தமிழ் நூல் பதிப்பாளர்
     
பணம் செலுத்தும் போது கவனிக்க...
ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.60/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) மேலும் விவரங்களுக்கு
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.
எங்களைப் பற்றி

அன்புடையீர்!

     2009ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று எமது கௌதம் பதிப்பகம் துவங்கப்பட்டது. தற்போது எமது பதிப்பகத்தின் இணையதளமாக இத்தளம் (www.gowthampathippagam.in) 2016 டிசம்பர் 18 முதல் செயல்பட்டு வருகிறது.

     எமது பதிப்பகத்தில் வெளியிடப்படவுள்ள நூல்கள், அவற்றைப் பற்றிய விவரங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் உடனடியாக இத்தளத்தில் வெளியிடப்படும்.

     எமது பதிப்பகத்தின் மூலம் பல தரப்பட்ட மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில், நல்ல நூல்களை குறைந்த விலையில் பதிப்பிக்க இருக்கிறோம்.

     ஏற்கெனவே முன்பு எமது சென்னைநெட்வொர்க்.காம் இணைய தளத்தின் ஒரு பகுதியாக நாங்கள் வெளியிட்டு வந்த மின்னூல் குறுந்தகடுகள் இனி வரும் காலங்களில் இப்பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்படும். இந்த ஒருங்கிணைப்பு மாற்றத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு மேலும் சிறந்த முறையில் தமிழ்ச் சேவை புரிய இயலும் என்று நம்புகிறோம்.

     வாசகர்கள் எமது இந்த புதிய கௌதம் பதிப்பகத்தின் நூல் வெளியீடுகளுக்கும், மின்னூல் குறுந்தகடு வெளியிடுகளுக்கும் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888